புக்கிட் சாலில் நெடுஞ்சாலை
கூட்டரசு சாலை 217 | |
---|---|
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை Bukit Jalil Highway பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை (Puchong–Sungai Besi Highway) | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 4.30 km (2.67 mi) |
பயன்பாட்டு காலம்: | 1995 – |
வரலாறு: | 1997 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | பூச்சோங் |
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை JKR(B) 11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை சுங்கை பீசி விரைவுச்சாலை | |
கிழக்கு முடிவு: | சுங்கை பீசி |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கின்ராரா தேசிய விளையாட்டு வளாகம் தொழில்நுட்ப பூங்கா மலேசியா புக்கிட் சாலில் புஞ்சாக் சாலில் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 217 (மலேசியா) (ஆங்கிலம்: Bukit Jalil Highway அல்லது Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.
கட்டணமில்லா நெடுஞ்சாலையான இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கில் சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் ஜெயா அருகே டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.
பொது
[தொகு]இந்த நெடுஞ்சாலை கின்ராரா மற்றும் புக்கிட் சாலில் நகரங்களைக் கடந்து செல்கிறது.[1]
புக்கிட் சாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்தப் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் சாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது.
2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.